மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும் – சவுமியா அன்புமணி வலியுறுத்தல்!!

சென்னை:
சென்னை விமான நிலையத்தில், இந்தியா டர்ன்ஸ் பிங்க் மற்றும் பிங்க் ரிப்பன் அறக்கட்டளை சார்பில் 11-வது ஆண்டாகமார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நேற்று நடை பெற்றது.

இந்த நிகழ்வில் ‘பசுமை தாயகம்’ அமைப்பின் தலைவரும், பாமக சட்டப்பேரவை குழு தலைவருமான சவுமியா அன்புமணி பிங்க் உடை அணிந்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.

இதில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் சவுமியா அன்புமணி கூறியதாவது:

மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

பெண்கள் வரத் தயங்கினாலும், குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் மேக வெடிப்பு, புயல் வெள்ள அபாயம் மற்றும் சூப்பர் எல் நினோவினால் ஏற்படும் பாதிப்புகளை எப்படி சமாளிக்கப் போகிறோம்? அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விளக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தவெக அரசு, நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

உணவில் கலப்படம் என்பதை விட, உணவு உற்பத்தியில்தான் கலப்படம் ஏற்படுகிறது. கீரையில் இருந்து கோழி இறைச்சி வரை வேகமாக வளர மருந்து, ஊசி பயன்படுத்தப்படுகிறது.

காற்றிலும் கலப்படம் உள்ளது. திடக்கழிவு மேலாண்மைக்கு மாற்று திட்டம் இல்லாததால் குப்பை எரிக்கப்படுகிறது.

இதனால் மண், காற்று மாசுபடுகிறது. சுற்றுச்சூழல் மாசு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *