ஆடை கசங்காமல் அசால்ட்டாக ரூ.500 கோடி வசூலிக்க ரஜினியால் மட்டும் தான் முடியும் – ‘ஜெயிலர் 2’ ரஜினிக்கு அல்லு அர்ஜுன் பாராட்டு!!

சென்னை:
ரஜினிகாந்த் என்கிற வசீகரத்தின், நட்சத்திரத்தின் உண்மையான எடுத்துக்காட்டு ‘ஜெயிலர் 2’ என நடிகர் அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தைப் பாராட்டி நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “ரஜினிகாந்த் சாரின் நட்சத்திர அந்தஸ்த்து, ஸ்டைல், வசீகரம் ஆகியவற்றின் உண்மையான எடுத்துக்காட்டு ‘ஜெயிலர் 2’. தொடர்ந்து உற்சாகமூட்டச் செய்யும் ஒரு பொழுதுபோக்கு கலைஞர்.

அனிருத் சகோதரர் கலக்கிவிட்டார். அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளரும் தங்களின் அன்பை இந்தப் படத்தில் கொட்டி உள்ளனர். ஷோமேன் நெல்சன் திலீப்குமார் மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளார்.

ஆடை கசங்காமல் அசால்ட்டாக ரூ.500 கோடி வசூலிக்க ரஜினியால் மட்டும்தான் முடியும். சன் பிக்சர்ஸ், ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

தானொரு தீவிர ரஜினி ரசிகர் என பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த அல்லு அர்ஜுன், அவரின் இளமைக் காலத்தின் பெரும் பகுதியை சென்னையில் கழித்துள்ளார்.

அப்போது, ரஜினி படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது வழக்கம் என்றும், தான் மனதளவில் எப்போதும் சென்னை பையனே என்றும் அடிக்கடி பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர் 2’. இந்தப் படத்தில், ரஜினியுடன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ், வித்யாபாலன் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

அனிருத் இசையமைத்திருக்கு படத்துக்கு, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், ஆர்.நிர்மல் படத்தொகுப்பு பணியையும் மேற்கொண்டுள்ளனர். சன் பிக்சர்ஸ் இதைத் தயாரித்திருக்கிறது.

இதனிடையே, ‘ஜெயிலர் 2’ படம் வெளியாகி அதன் முதல் வார இறுதியில், சுமார் ரூ.600 வசூலித்திருப்பதாக அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *