மோகன்லால் நடிப்பில், விஷ்ணு மோகன் இயக்கி வரும் ஆக்‌ஷன் படத்தில் உகாண்டாவின் புகழ்பெற்ற ‘கெட்டோ கிட்ஸ்’ நடனக் குழு!!

சென்னை:
மோகன்லால் நடிப்பில், விஷ்ணு மோகன் இயக்கி வரும் ஆக்‌ஷன் படத்தில் உகாண்டாவின் புகழ்பெற்ற ‘கெட்டோ கிட்ஸ்’ நடனக் குழு இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீகோகுலம் பிலிம்ஸ் பேனரின் கீழ் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘ஆப்ரேஷன் கங்கா’. தேசிய விருது பெற்ற இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கும் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் அர்ஜுன் ராம்பால், பாக்யஸ்ரீ போர்ஸ், பார்த்திபன் மற்றும் ஆதில் ஹுஸைன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மீட்பு பணிகளையும், அதன் இறுதிக்கட்ட நடவடிக்கையும் பற்றி இந்தப் படம் கூறும் என்று சொல்லப்படுகிறது. தற்போது இந்தப் படத்தில், உகாண்டா நாட்டின் சிறுவர்கள் நடனக் குழு ஒன்று இணைய இருக்கிறது.

இந்தத் தகவலை நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ‘கோகுலம் மூவிஸ், கோகுலம் கோபாலன் தயாரிப்பில், விஷ்ணு மோகன் இயக்கி வரும் எனது புதிய படமான ‘ஆப்ரேஷன் கங்கா’வில், அபார திறமை வாய்ந்த ‘கெட்டோ கிட்ஸ்’ என்னுடன் இணைவதில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.

‘ஆப்ரேஷன் கங்கா’ படத்துக்கு இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணியை ‘புஷ்பா’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மிரோஸ்லாவ் குபா பெரேசக் மேற்கொள்கிறார். ஷாஸ்வத் சச்தேவ் இசையமைக்கிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *