கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு !! கிராம மக்கள் தவிப்பு…

கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சாலை வசதி இல்லை.

இக்கிராம மக்கள் அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைக ளுக்காக பல கி.மீ. தொலைவுக்கு வனப்பகுதி வழியாக நடந்தே சென்று வரும் நிலை உள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு பெய்த கனமழை யால், மலைக்கிராம மக்கள் செல்லும் வழியில் உள்ள கல்லாறு, மூலையாறு, கெங்காரு ஓடை என்று அழைக்கப்படும் பெரி யாறு உள்ளிட்ட காட்டாற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால், மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் மருத்துவ தேவைக்குக்கூட சென்று வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

கனமழை காரணமாக, கிராமத்தில் சில வீடுகளும் சேதமடைந்துள்ளன. மின்தடையும் ஏற்பட்டுள் ளதால், கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கிராம மக்களை மீட்டு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *