சென்னை கீழ்ப்​பாக்​கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் நேற்று மனநல சேவை​கள் மற்​றும் மேம்​பாடு குறித்த கருத்​தரங்கை தொடங்கி வைத்​த சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் !!

சென்னை:
சென்னை கீழ்ப்​பாக்​கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் நேற்று மனநல சேவை​கள் மற்​றும் மேம்​பாடு குறித்த கருத்​தரங்கை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தொடங்கி வைத்​தார்.

சுகா​தா​ரத்​துறை செயலர் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அனீஷ் சேகர், அரசு மனநல மருத்​து​வ​மனை இயக்​குநர் மாலை​யப்​பன், பேராசிரியர் மருத்​து​வர் பூர்ண சந்​திரிகா உள்​ளிட்​டோர் நிகழ்​வில் பங்​கேற்​றனர்.

நிகழ்​வில் அமைச்​சர் அருண்​ராஜ் பேசி​ய​தாவது: மனநலம் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு முதல் சிகிச்சை என்​பது குடும்​பத்​தினருடைய உண்​மை​யான புரிதலும், அரவணைப்​பும் தான்.

உடலில் ஒரு நோய் ஏற்​படு​வது போல், மூளை​யில் ஏற்​படக்​கூடிய சில ரசாயன மாற்​றங்​களால் சில மனநோய்​கள் ஏற்​படலாம்.

இதை கண்​டறிந்து குணப்​படுத்த முடி​யும். ஆரம்ப நிலை​யிலேயே கண்​டறிந்​தால் ஒருங்​கிணைந்த சிகிச்சை மூலம் குணப்​படுத்​தலாம்.

மனநலப் பிரச்​சினை​கள் உலகம் முழு​வதும் மிகப்​பெரிய பொது சுகா​தார சவாலாக உரு​வெடுத்​துள்​ளன. உலக சுகா​தார நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள தகவலின்​படி, உலகம் முழு​வதும் சுமார் 120 கோடி மக்​கள் மனநல கோளாறுகளு​டன் வாழ்​கின்​றனர். அதாவது சுமார் 7 பேரில் ஒரு​வருக்கு மனநல பாதிப்பு உள்​ளது.

மனநல நோயால் பாதிக்​கப்​பட்டு வாழ்ந்​தவர்​களின் அனுபவங்​கள், அவர்​களு​டைய குடும்​பத்​தினர், நண்​பர்​கள், பாது​காவலர்​கள் மற்​றும் சமூக அமைப்​பு​களிடம் கருத்​துக்​களை கேட்க இருக்​கிறோம்.

மனநல திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இதன் மூலம் மாவட்ட மருத்​து​வ​மனை​கள், அரசு மருத்​து​வ​மனை​கள், வட்​டார ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் மனநல ஆலோ​சனை மற்​றும் சிகிச்​சைகள் பொது​மக்​களுக்கு வழங்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *