‘இளைய புரட்​சித்​தலைவி த்ரிஷா பேரவை’ என்ற நற்​பணி இயக்​கம் திருநெல்வேலியில் தொடக்கம்!!

திருநெல்வேலி:
நடிகை த்ரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்​சித்​தலைவி த்ரிஷா பேரவை’ என்ற நற்​பணி இயக்​க​த்தை திருநெல்​வேலி​யில் ராஜகோபால் என்​பவர் நேற்று தொடங்கி, பெயர், லோகோவை வெளி​யிட்​டார்.

லோகோவில் நடிகை த்ரிஷா படமும் ‘பத​விக்​காக அல்ல, தமிழக மக்​களின் உரிமைக்​காக’ என்ற வாசகமும் இடம்​பெற்​றுள்​ளது.

இதுகுறித்து ராஜகோபால் கூறும்போது, ‘‘முதல்​வர் விஜய் தலை​மையி​லான தவெக அரசு மிக சிறப்​பாக செயல்​படு​கிறது.

இருந்​தா​லும், விஜய்​யுடன் இணைந்து த்ரிஷாவும் அரசி​யலில் பயணித்​தால் ஜெயலலிதா ஆட்​சி​யைப் போன்று ஓர் ஆட்சி நமக்கு கிடைக்​கும். ஜெயலலிதாவை போன்ற ஆளுமை திரிஷாவுக்கு உள்​ளது.

ஆளுமை என்ற அடிப்​படை​யில் ஜெயலலிதாவின் வழித்​தோன்​றலாக நாங்​கள் த்ரிஷாவை பார்ப்​ப​தால், அவருக்கு, ‘இளைய புரட்​சித்​தலைவி’ என்ற பட்​டத்தை சூட்டி உள்​ளோம்’’ என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *