நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா டிச. 3-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு!!

சென்னை;
நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா டிச. 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பாடகி கெனிஷா பதிவிட்டதாகக் கூறி ஆர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தார்.

தன்னைப் பற்றி அவதூறாகப் பேச கெனிஷாவிற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் உள்ள பழைய பதிவுகளை நீக்க வேண்டும் மற்றும் மானநஷ்ட ஈடாக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் ஆர்த்தி ரவி தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கில் தற்போது இந்த உத்தரவு வந்துள்ளது. கெனிஷா நேரில் ஆஜராகத் தவறினால், வழக்கின் விசாரணை அன்றே இறுதி செய்யப்பட்டு முடிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக நாளிதழ்களில் பொது அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகர் ரவிமோகன் தொடர்ந்த விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *