திருப்பத்தூரில் அமைச் சர்கள் வருவதற்கு முன்பே தனியாக வந்து மருது சகோதரர்கள் சிலைகளுக்கு எம்எல்ஏ குழந்தைராணி மரியாதை!!

திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் அமைச்சர்கள் வருவதற்கு முன்பே தனியாக வந்து மருது சகோதரர்கள் சிலைகளுக்கு எம்எல்ஏ குழந்தைராணி மரியாதை செலுத்தினார்.

விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு தினம் இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அவர்களது மணிமண்டபத்தில் நடைபெறுகிறது.

இதையொட்டி, மருதுசகோதரர்களின் சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள் வருவதற்கு முன்பே சிவகங்கை எம்எல்ஏ குழந்தைராணி மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

‘ஏன் தனியாக வந்தீர்கள்’ என்று செய்தியாளர்கள் கேட்டதும், எம்எல்ஏ குழந்தைராணி சுதாரித்துக் கொண்டார்

பின்னர் அமைச்சர்களுக்காக காத்திருந்தார். தொடர்ந்து அமைச்சர்கள் நிர்மல்குமார், டி.கே.பிரபு, முகமதுபர்வேஸ், மதன்ராஜா ஆகியோர் வந்ததும் அவர்களுடன் சேர்ந்து மருதுசகோதரர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஏற்கெனவே எம்எல்ஏ குழந்தை ராணி, அமைச்சர் டி.கே.பிரபு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்காமல் புறக்கணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *