கேரள கிராமத்தில் கடந்த 70 ஆண்​டு​களாக எங்​கள் கிராமத்​தில் இரட்டைக் குழந்​தைகள் பிறப்​பது வழக்கமாக இருந்து வரு​கிறது!!

திருவனந்தபுரம்:
கேரளா​வின் மலப்​புரம் மாவட்​டத்​தில் கோடினி கிராமம் உள்​ளது. அங்கு சுமார் 2,000 குடும்​பங்​கள் வசிக்​கின்​றன.

பெரும்​பாலும் ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் இரட்டையர்கள் உள்ளனர். இதன் ​காரண​மாக கோடினி கிராமம், இரட்​டையர் கிராமம் என்று அழைக்​கப்​படு​கிறது.

இதுகுறித்து கிராம மக்​கள் கூறிய​தாவது: கடந்த 70 ஆண்​டு​களாக எங்​கள் கிராமத்​தில் இரட்டைக் குழந்​தைகள் பிறப்​பது வழக்கமாக இருந்து வரு​கிறது.

இரு குழந்​தைகளும் ஒரே மாதிரியாக இருப்​ப​தால் அவர்​களை அடை​யாளம் காண்​ப​தில் பெரும் சிரமங்​கள் ஏற்​படும். தற்​போதைய சூழலில் எங்​கள் கிராமத்​தில் 550 பேர் இரட்​டையர்​களாக உள்​ளனர்.

எங்​கள் கிராமத்​தைச் சேர்ந்த பெண்​கள் திரு​மண​மாகி வெளியூர்களுக்கு செல்​கின்​றனர்.

அவர்​களுக்கு பிறக்​கும் குழந்தைகளும் பெரும்​பாலும் இரட்​டையர்​களாக உள்​ளனர். இதற்கு மரபணு காரண​மாக இருக்​கலாம். இவ்​வாறு கிராம மக்கள் தெரி​வித்​தனர்.

சமூக ஆர்​வலர்​கள் கூறிய​தாவது: கோடினி கிராமம் குறித்து இந்​திய ஆய்வு நிறு​வனங்​கள் மற்​றும் வெளிநாட்டு நிறு​வனங்​கள் பல்​வேறு ஆய்​வு​களை நடத்தி உள்ளன.

கிராமத்​தின் குடிநீர், மக்​களின் உணவு பழக்க வழக்​கம், சுற்​றுச்​சூழல் ஆகியவை குறித்து இந்த நிறு​வனங்​கள் ஆய்வு நடத்தி உள்ளன.

நைஜீரி​யா​வின் இக்​போ-ஓரா சமு​தா​யத்​தில் இரட்டைக் குழந்​தைகள் பிறப்​பது வழக்​க​மாக உள்​ளது. இதற்கு சில உணவு வகைகள் காரணம் என்று விஞ்​ஞானிகள் கண்​டு​பிடித்து உள்ளனர்.

ஆனால் கோடினி கிராமத்​தைப் பொறுத்​தவரை உணவு வகைகளுக்​கும் இரட்டைக் குழந்​தைகள் பிறப்​புக்​கும் தொடர்பில்லை என்​பது தெரிய​வந்​துள்​ளது.

கிராம மக்​களின் மரபணு தொடர்​பாக​வும் விஞ்​ஞானிகள் ஆய்வு நடத்தி உள்​ளனர்.

ஆனால் இதி​லும் பெரிய முன்​னேற்​றம் ஏற்​பட​வில்​லை. இதர கேரள மக்​களைப் போன்றே கோடினி கிராம மக்​களின் மரபணுவும் இருக்​கிறது.

இரட்டைக் குழந்​தைகள்​ விவ​காரம்​ தொடர்​​பாக தொடர்​ந்​து ஆய்​வு நடத்​தப்​பட்​டு வரு​கிறது. இவ்​​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *