தவெக எம்எல்ஏ-க்களில் 60 முதல் 70 பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள் ; ரகுபதி கணிப்பு!!

சென்னை:
“தவெக எம்எல்ஏ-க்களில் 60 முதல் 70 பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள் என தகவல் கசிகிறது; திமுக மீது பழிபோடுவது மட்டும்தான் தவெகவுக்கு தெரிந்தது” என முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது. ஆனால் மனமாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி திமுகவுக்கு உள்ளது.

தவெக எம்எல்ஏ-க்களில் 60 முதல் 70 பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள் என தகவல் கசிகிறது; ஆனால் அது உறுதி செய்யப்படாத ஒன்று. தவெக எம்எல்ஏ-க்கள் 30 பேர் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக கூட தெரிவித்துள்ளது.

தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக-விடம் பணம் இல்லை. தவெக அதிருப்தி எம்எல்ஏ-க்களாலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்படலாம். தவெக ஆட்சி கவிழ்ந்த பிறகு நடக்கும் தேர்தலில் திமுக வெற்றிபெறும்.

அனைத்து துறைகளிலும் கஷ்டம்; மக்கள் சிரமப்படுகிறார்கள். தவெக எம்எல்ஏக்கள் வரம்பு மீறி செயல்படுகிறார்கள். அதிகாரிகளே குழப்பத்தில் உள்ளனர். மக்கள் உரிமை தொகை கிடைக்கப் பெறாதவர்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுக மீது பழிபோடுவது மட்டும்தான் தவெகவுக்கு தெரிந்தது.

பாலியல் சீண்டல் அதிகரித்துள்ளது. சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்; அதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டாமா?

கர்நாடக முதல்வர் மேடையில் இருந்தார். அப்போதே முதல்வர் விஜய் மேகேதாட்டு விவகாரம் குறித்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் வழக்கம்போல மவுன சாமியாராகவே இருந்துவிட்டார்” என்று அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *