2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம்

புத்தி சாதுர்யத்துடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் தேக ஆரோக்கியம், மன அமைதி, பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும்.

மன நிம்மதியை குறைத்த கடன் பிரச்சினை ஓரளவு குறையும். நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். புதிய கடன் வாங்கி பழைய கடன் அடைப்பீர்கள்.

விபரீத ராஜயோகத்தால் உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும்.

28.9.2026 அன்று காலை 10.16 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். யார் வம்பு தும்பும் வேண்டாம் என்று ஒதுங்கி நிற்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். மகாளய பட்ச காலங்களில் சிவனடியார்களுக்கு உதவவும்

கன்னி

மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய வாரம். ராசியில் விரயாதிபதி சூரியன், சஞ்சரிக்கிறார்.

எனினும் ராசி அதிபதி புதன் தன ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் சேர்க்கை பெறுவதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். வசீகரமான தோற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும்.

தாய், தந்தைவழி தாத்தா மூலம் உங்களுக்கு நிதி உதவி கிடைக்கலாம். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் நிலுவை சம்பள வரவு மனதை மகிழ்விக்கும்.

28.9.2026 அன்று காலை 10.16 முதல் 30.9.2026 பகல் 1.13 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கவும்.

தேவையற்ற கற்பனை, சிந்தனைகளை தவிர்க்கவும் மகாளய பட்ச காலத்தில் கன்னிப்பெண்களுக்கு இனிப்பு உணவு தானம் வழங்கவும்.

துலாம்

மீண்டும், மீண்டும் வெற்றி வாய்ப்புகள் குவியும் வாரம். ராசியில் உள்ள புதன் சுக்கிரனுக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது.

சுமாரான வீட்டில் வசித்தவர்கள் நல்ல வசதியான வாடகை வீட்டிற்கு இடம் பெயரும் வாய்ப்பு உள்ளது.

உயர் கல்வி முயற்சிக்கு சாதக மான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. ஆரோக்கிய குறைபாடு அகலும். கூலித் தொழிலாளிகளுக்கு இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து வேலை கிடை க்கும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆத ரவு கிடைக்கும்.

குடும்பம் மகிழ்ச்சியும் நிம்ம தியும் நிறைந்ததாக இருக்கும்.30.9.2026 பகல் 1.13 மணி முதல் 2.10.2026 பகல் 3.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை ஒத்தி வைக்கவும்.

வேலைப் பளு அதிகமாகும். வீண் விரயங்கள் மிகுதியாகும். மகாளய பட்ச காலத்தில் வசதி இல்லாதவர்களின் திருமணச் செலவுக்கு உதவவும்.

விருச்சிகம்

தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும் வாரம். ராசிக்கு உச்ச குருவின் பார்வை உள்ளது. தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும். திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். புத்திர பாக்கியம் உண்டாகும்.

பங்கு சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் இணைந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும்.

சம்பந்திகள் சண்டை முடிவிற்கு வரும். வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் நல்ல நேரம். புதிய சொத்துக்கள், உயர்ரக வாகனங்கள் சேரும்.

தந்தையின் மூலம் பெரும் பணம் கிடைக்கும். கடன், வட்டி தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும்.

இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *