மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்!!

மேஷம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமானப் பற்றாக்குறை அகலும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை கைகூடும்.

ரிஷபம்

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும்.

மிதுனம்

இடமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத் தொல்லையுண்டு.

கடகம்

கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகையைப் பெறுவதில் சிக்கல்கள் உருவாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்லும்.

சிம்மம்

வாழ்க்கைத்தரம் உயரும் நாள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்கும் திட்டம் கைகூடும். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும்.

கன்னி

சாமர்த்தியமானப் பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

துலாம்

தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வாரிசுகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கொடுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். வருமானம் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும்.

தனுசு

உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்வர். வியாபார விரோதம் விலகும். வரன்கள் வாயில் தேடி வரும்.

மகரம்

குழப்பங்கள் அகலும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வீடு வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் வருமானம் உண்டு.

கும்பம்

விரயங்கள் கூடும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். வரவைவிடச் செலவு கூடும்.

மீனம்

நன்மைகள் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *