உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டி!!

சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத்தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா ஆர்.தங்கவேலு ஆகியோர் முன்னிலையில் காணொலி வாயிலாக நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதில், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, வார்டு வாரியாக மக்களைச் சந்தித்து நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான களப்பணிகளை அனைத்து நிர்வாகிகளும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும், கடந்த செப்.15 அன்று நடந்திருக்கவேண்டிய ஏரியா சபைகள் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இது மிகுந்த கண்டனத்துக்குரியது.

அடுத்து, டிச.10 அன்று நடத்தப்பட வேண்டிய ஏரியா சபைக் கூட்டங்களை முறையான முன்னறி விப்போடு நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

ஏரியா சபைக் கூட்டங்களில் நமது நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு அவரவர் வார்டு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ விளைவுகளால் மக்கள் பாதிப்புக்குள்ளாகும்போது நிர்வாகிகள் உடனடியாக நிவாரணப்பணிகளில் ஈடுபடவேண்டும்.

கட்சி தலைவர்கமல்ஹாசன் பிறந்த நாளான நவ. 7-ம் தேதி தமிழகம் முழுவதும் ரத்த தானம், உடல்தானம், மரக்கன்றுகள் நடுதல், கல்விசார் பணிகள் உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மநீம தெரிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *