தவெக ஆட்​சிக்கு வந்த குறுகிய காலத்​தில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் ; பழனிசாமி குற்றச்சாட்டு!!

மதுரை:
தமிழகத்​தில் திட்​ட​மிட்டு மின் பற்​றாக்​குறையை உருவாக்கி கொள்​முதலில் ஊழல் செய்​கின்​றனர் என அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி கூறினார்.

மதுரையில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் 2011-ல் அதிமுக ஆட்​சி​யின்​போது ஒரு யூனிட் மின்​சா​ரம் 4 ரூபாய் 75 பைசா, 2012-ல் ரூ.6.35, 2013-14-ல் ரூ.5.20 முதல் 5.40, 2014-15-ல் ரூ.5.50, 2018-19, 20-ம் ஆண்​டுகளில் ரூ.5.48-க்கு கொள்​முதல் செய்​யப்​பட்​டது. 2021 ஆட்சி மாற்​றத்​துக்​குப் பின்பு திமுக அரசு ஒரு யூனிட் மின்​சா​ரம் ரூ.11 முதல் 20 வரை கொள்​முதல் செய்​தனர்.

விஜய் முதல்​வ​ரான பின்பு வீரவசனம் பேசும் அமைச்​சர் நிர்​மல்​குமார், கடந்த ஆட்​சி​யில் மின்​சார கொள்​முதலில் ஊழல் என்ற கருத்தை சொல்லி, ஒரு யூனிட் மின்​சா​ரம் ரூ.20-க்கு கொள்​முதல் ஒப்​பந்​தம் செய்து பிறகு ரத்து செய்​தார்.

கடந்த 5 மாதங்​களாக முறை​யாக மின்​சார கொள்​முதல் செய்​யாமல், மின் பற்​றாக்​குறையை செயற்​கை​யாக உரு​வாக்கி, ஒரு யூனிட் மின்​சா​ரத்தை ரூ.37.50-க்கு கொள்​முதல் செய்​வ​தாக அறி​வித்​துள்​ளனர். இதன் மூலம் எங்கே ஊழல் நடக்​கிறது என்​பது தெரி​கிறது.

சட்​டம், ஒழுங்கு சரி​யில்லை. குற்​றம் செய்​தவர்​களை கண்​டு​பி​டிக்க முடிய​வில்லை. தண்​டனை பெற்று சிறை​யில் இருப்​பவர்​களை​யும் பாது​காக்க முடிய​வில்லை. முதல்​வர் ஆய்வு செய்த புழல் சிறை​யி​லிருந்து 2 கைதி​கள் தப்​பினர். ஜோசி​யர் சொன்​னபடி புழல் சிறைக்கு சென்று வந்​திருக்​கலாம். தேனி சிறை​யில் 17 கைதி​கள் சர்வ சாதா​ரண​மாக வெளி​யில் சென்​றுள்​ளனர். இது மோச​மான ஆட்​சி​யாக இருக்​கிறது.

சனி, ஞாயிறு அரசு ஊழியர்​களுக்கு விடு​முறை போன்று முதல்​வரும் விடு​முறை எடுக்​கிறார். முந்​தைய நாள் மாலை 6 மணிக்கு வீட்​டுக்​குள் முதல்​வர் சென்​றால் அடுத்த நாள் காலை 9 மணிக்கு மேல் தான் அதி​காரி​களை பார்ப்​ப​தாக தகவல் உள்​ளது.

விசித்​தர​மான முதல்​வ​ராக இருக்​கிறார். அவர் ஆட்​சிக்கு வந்த பிறகு மக்​களுக்கு கொடுத்த பரிசு விலை​வாசி உயர்வு. ஆவி​னிலும் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தி உள்​ளனர்.

பசும்​பொன்​னில் சசிகலா, டிடிவி.தினகரனை நான் சந்​திப்​ப​தாக தவறான தகவலை பரப்ப வேண்​டாம். ஏற்​கெனவே டிடிவி.தினகரன் எங்​களு​டன் இணைந்து பணி​யாற்​றுகிறார். ஒருங்​கிணைந்த அதிமுக என்று 10 ஆண்​டுகளாக கூறி வரு​கின்​றனர்.

நான் முதல்​வ​ராக பொறுப்​பேற்​றது முதல் கட்​சி​யில் குழப்​பத்தை ஏற்​படுத்த சிலர் முயற்​சிக்​கின்​றனர். கட்​சி​யில் உழைக்​கிறவர்​களுக்கு உரிய மரியாதை கிடைக்​கும்.

மீண்​டும் அதிமுக பீனிக்ஸ் பறவை போன்று மீண்​டெழும். யார் வேண்​டு​மானாலும் கட்சி ஆரம்​பிக்​கலாம். விஜய்க்கு ஜாக்​பாட் அடித்​ததுபோல், தனுஷுக்​கும் ஒரு ஜாக்​பாட் அடிக்​கலாம் என நம்​பு​கின்​றனர். நட்​சத்​திரங்​கள் அரசி​யலுக்கு வந்​தால் அவர்​கள் விமான நிலை​யம், சாலைகளில் கையை காட்​டிக்​கொண்டே செல்​வர்.

தவெக ஆட்​சிக்கு வந்த குறுகிய காலத்​தில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்​கி​யுள்​ளனர். இவ்​வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *