ரஜினியின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பு !!

சென்னை:
ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமாக உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் ப்படத்தை, ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது நயன்தாரா இணைந்திருப்பது குறித்த அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டருடன் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே ரஜினிகாந்துடன் இணைந்து ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’ (ஒரு பாடலுக்கு மட்டும்) ‘குசேலன்’, ‘தர்பார்’ மற்றும் ‘அண்ணாத்தே’ ஆகிய படங்களில் நயன்தாரா நடித்திருந்த நிலையில், தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இப்படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டிருந்தார்.

இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு மற்றும் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ராகவ் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார்.

இப்படம் வரும் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *