குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று காலை தொடங்கினார்!!

சென்னை:
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று காலை தொடங்கினார். சென்னை கொளத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு அவர் கேக் வழங்கினார்.

சென்னை – கொளத்தூர் மடுமா நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு முதல்வர் விஜய் கேக் வழங்கினார்.

அந்த பள்ளியின் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் அவர் கேக் வழங்கினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், ஜெகதீஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அப்போது பள்ளி மாணவர்களில் சிலர் தேசத் தலைவர்கள் வேடம் அணிந்து வந்திருந்தனர். அவர்களுடன் முதல்வர் விஜய் பேசி மகிழ்ந்தார். மேலும், மழலையர் பள்ளி மாணவர்களில் சிலருக்கு கேக் ஊட்டினார் முதல்வர் விஜய்.

பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் விஜய், கேக் வழங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கேக் வழங்கும் பணிகள் தொடங்கின.

மாவட்ட வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த பணியை மேற்கொண்டுள்ளதாக தகவல்.

நவம்​பர் 14-ம் தேதி ஆண்​டு​தோறும் குழந்​தைகள் தின​மாகக் கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்​டி, நடப்​பாண்டு பள்ளி மாணவர்​களுக்கு மதிய சத்​துணவுடன் கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்​தது.

இதற்​காக தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம் மூலம் கடந்த அக்​டோபர் 11-ம் தேதி ரூ.9.27 கோடி மதிப்​பில் குறுகிய கால டெண்​டர் வெளி​யிடப்​பட்​டது.

இதன் அடிப்​படை​யில் 4 பிரபல நிறு​வனங்​களுக்கு கேக் விநி​யோக ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்டு சுமார் 45 கிராம் மதிப்​புடன் மொத்​தம் 62 லட்​சத்து 46 ஆயிரத்து 412 கேக் பாக்​கெட்​டு​கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டன.

இதில் பிரிட்​டானியா நிறு​வனம் 45 கிராம் எடை​யுள்ள 10 லட்​சத்து 3,996 கேக்​கு​களை​யும், ட்ரீம் பேக் நிறு​வனம் 45 மற்​றும் 50 கிராம் எடை​யுள்ள 33 லட்​சத்து 87,459 கேக்​கு​களை​யும் வழங்கி உள்​ளது.

எலைட் நேச்​சுரல் நிறு​வனம் 45 கிராம் எடை​யுள்ள 10 லட்​சத்து 6,861 கேக்​கு​களை​யும், ஐடிசி நிறு​வனம் 43.2 கிராம் எடை​யுள்ள 8 லட்​சத்து 48,096 கேக்​கு​களையும் தயாரித்​துள்​ளது.

தமிழகத்​தில் முதல்​முறை​யாக குழந்​தைகள் தினத்​தையொட்டி அரசு சார்​பில் முதல்​வர் விஜய் இன்று காலை சுமார் 10 மணி அளவில் கொளத்​தூரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்​ளி​யில் மாணவ, மாணவி​களுக்கு கேக்​கு​களை வழங்கி தொடங்கி வைத்தார்.

முதலில் இந்த திட்​டத்தை அம்​பாச​முத்​திரம் தொகு​தி​யில் முதல்​வர் விஜய் தொடங்கி வைப்​பார் என்று எதிர்பார்க்​கப்​பட்​டது. ஆனால், கொளத்​தூருக்​கு மாற்​றம் செய்​யப்​பட்​டது.

தலைநகர் சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில் 2.90 லட்​சம் மாணவர்​களுக்கு கேக் மற்​றும் வாழ்த்து அட்டை வழங்​கப்​படு​கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *