நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தும், நைவேத்யங்கள் படைத்தும் வழிபாடு!!

திருவள்ளூர்,
ஐப்பசி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினம் நாக சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் நாக தேவதைகளுக்கு பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து, நவதானியங்கள் வைத்து வழிபடுவது வழக்கம்.

அவ்வகையில் இன்று (13-11-2026) நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் உள்ள நாக தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

திருவள்ளூர் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்தும், அங்குள்ள வேப்ப மரத்திற்கு மஞ்சள் கயிறு கட்டியும், நாக தேவதைகளுக்கு நவதானியங்கள், கொழுக்கட்டை படைத்தும் ஏராளமான பெண்கள் வழிபடுகின்றனர்.

இதேபோல் திருவள்ளூர் அடுத்த புட்லூர் பூங்காவனத்தம்மன் திருக்கோவிலில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *