4வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என கைப்பற்றியது.

3 ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி மவுண்ட் மானுங்காயில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 333 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் வில் யங் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிம் சைபர்ட் அரை சதம் கடந்து 58 ரன்னில் அவுட்டானார். பின் ஆலன் அதிரடியாக ஆடி 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி சார்பில் குர்னூர் பிரார், ஆகிப் நபி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியினர் துல்லியமாகப் பந்து வீசியதால் இந்திய வீரர்கள் சிரமப்பட்டனர்.

ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் டக் அவுட்டாகினர். ருதுராஜ் 5 ரன்னில் வெளியேறினார்.

இந்திய அணி 9 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது.

5வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், அக்சர் படேல் இணைந்தனர். இந்த ஜோடி 44 ரன்கள் சேர்த்த நிலையில் அக்சர் படேல் 21 ரன்னில் அவுட்டானார்.

இஷான் கிஷன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் நிலைக்கவில்லை.

இறுதியில், இந்திய அணி 26.4 ஓவரில் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

நியூசிலாந்தின் மேட் ஹென்ரி 6 விக்கெட்டும், மேத்யூ பிஷர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *