கள்ளக்குறிச்சியில் இருந்து ஆட்சியர் போக நேர்ந்தால் மிகப்பெரிய பிரளயம் வெடிக்கும் என எச்சரிக்கிறேன் – தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் !!

விழுப்புரம்: ஆட்சியருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கண்டித்து பாஜக சார்பில் கள்ளக்குறிச்சியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் அனுப்பிய குறுஞ்செய்தியானது தீயாக பரவி வந்தாலும், முதல்வர் விஜய் வாய் திறக்க மறுக்கிறார்.

பெண்கள் மீது முதல்வருக்கு மரியாதை இருந்திருந்தால், அருள் விக்னேஷை கண்டித்திருப்பார், கட்சியில் இருந்து நீக்கி இருப்பார்.

பெண்களை பாதுகாத்துக் கொள்ள கள்ளக்குறிச்சியிலும் இடைத்தேர்தல் வந்தாலும் பராவாயி ல்லை என நடவடிக்கை எடுத்திருந்தால், பெண்கள் மீது முதல்வருக்கு அக்கறை உள்ளது என கூறலாம். எம்எல்ஏக்கள் ஒழுக்கம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தால் நீங்கள் உண்மையான அண்ணன்.

ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் இருந்து ஆட்சியர் போக நேர்ந்தால் மிகப்பெரிய பிரளயம் வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.

பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களை ஆட்சியர் உள்ளிட்ட பெண்கள் விரட்டி அடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *