ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரிப்பதாக அரசு தகவல்!!

சென்னை:
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரிப்பார் என்றும், நிர்வாகப் பிரிவு ஐஜி காமினி இந்த விசாரணைய கண்காணிப்பார் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ், அந்த மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ் செய்தி அனுப்பி, ஆட்சியரின் இல்லத்துக்கு சென்று தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை திருப்பூர் எஸ்பி ஸ்ருஷ்டி சிங் விசாரிப்பார் என்றும், நிர்வாக ஐஜி காமினி வழக்கு விசாரணையை கண்காணிப்பார் என்றும் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி.லட்சுமி நாராயணனிடம் தெரிவித்தார்.

முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் திரிசூலி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், ஆட்சியரின் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டப்பட்டவர் அரசியல் சாசன உயர் பதவியை வகிப்பதால், விசாரணையை ஐஜி அந்தஸ்து அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மற்றும் கண்காணிக்கும் அதிகாரிகள் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் நியமிக்கப்படுவார் என்றும், நிர்வாகப் பிரிவு ஐஜி காமினி இந்த விசாரணைய கண்காணிப்பார் என்றும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் உள்ள பதிவுகளை நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தும், அவை இன்னும் இடம்பெற்றுள்ளதாக, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பதிவுகளை நீக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *