இந்​தாண்டு தீபம் ஏற்​றாத தவெக அடுத்​தாண்டு ஆட்​சி​யில் இருக்​காது; முருகப்​பெரு​மான் அதை செய்து முடிப்​பார்- பக்​தர்​கள், இந்து அமைப்​பினர் வேதனை!!

சட்​டத்தை மதித்து தீபம் ஏற்​றாமல் பக்​தர்​களின் உணர்​வு​களு​டன் ஆட்​சி​யாளர்​கள் விளை​யாடி​விட்​டனர் என்று திருப்​பரங்​குன்​றத்​தில் நேற்று திரண்ட பக்​தர்​கள், இந்து அமைப்​பினர் வேதனை தெரி​வித்​தனர்.

பாஜக மாநில பொதுச் செய​லா​ளர் பேராசி​ரியர் ராம.ஸ்ரீனிவாசன்: அயோத்​திக்​காக 400 ஆண்​டுகள் போராடி வெற்றி பெற்​றோம். திருப்​பரங்​குன்​றத்​தில் தீபத்​தூணில் தீபம் ஏற்ற 40 ஆண்​டுகளாக போராடு​கிறோம்.

இன்​னும் எத்​தனை ஆண்​டுகளானாலும் சரி, தீபம் நிச்​சயம் ஏற்​றியே தீரு​வோம். கடந்​த ஆண்டு தீபத்​தூணில் தீபம் ஏற்​றாத திமுக தற்​போது ஆட்​சியில் இல்லை. இந்​தாண்டு தீபம் ஏற்​றாத தவெக அடுத்​தாண்டு ஆட்​சி​யில் இருக்​காது. முருகப்​பெரு​மான் அதை செய்து முடிப்​பார்.

உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்த மனுதா​ரரான வழக்கறிஞர் கே.கே.ரமேஷ்: நாளை காலை நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்கு தொடர்​வோம். நாளை மாலையே ராணுவப் பாது​காப்​போடு வந்து தீபம் ஏற்​று​வோம்.

அதி​காரி​கள் மீது கடுமையான தண்​டனைகள் பாயும். நீதித் துறையையே ஏமாற்​றும் இந்​தச் செயலை யாராலும் ஏற்க முடி​யாது.

சுபாஷினி (திருப்​பரங்​குன்​றம்): தீபத்​தூணில் தீபம் ஏற்​று​வதைப் பார்க்க குடும்​பத்​தோடு வந்​திருந்​தோம். ஆனால், போலீ​ஸாரை குவித்து பக்​தர்​களை பயமுறுத்தி கோயில் பகுதிக்கு வர​விடா​மல் செய்​தனர். அவர்​களை மீறித்​தான் நாங்​கள் கோயில் பகுதிக்கு வந்​தோம். கடந்த ஆண்​டைப்​போல், இந்த ஆண்​டும் திட்​ட​மிட்டு தீபத்​தூணில் தீபம் ஏற்​றாமல் ஏமாற்​றி​விட்​டனர். கோயில் விஷயத்​தில் அரசி​யல் செய்​வதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

ராஜசேகரன் (பரமக்​குடி): தவெக அரசு சட்​டத்தை மதிக்​க​வில்லை. பக்​தர்​கள் உணர்​வு​களு​டன் விளை​யாடி​விட்​டது. கோயில் விவகாரத்​தில் அரசி​யல் செய்​வது வெட்​கக்​கேடானது. யாரை திருப்​திப்​படுத்த இந்த முடிவு எடுத்​தார்​கள். அனைத்​துத் தரப்​பினருக்​கான ஆட்​சி​யாக இந்த ஆட்சி இல்லை. அரசை நடத்த முடிய​வில்லை என்​றால் வெளியேறி​விடுங்​கள்.

பத்​மகிரீசன் (அம்​பாசமுத்​திரம்): உச்ச நீதி​மன்​றமே உத்​தர​விட்​டிருந்​ததால், கண்​டிப்​பாக தீபத்​தூணில் தீபம் ஏற்​றப்​படும் என நம்​பிக்​கையுடன் குடும்​பத்​தோடு பார்க்க வந்​தோம். ஆனால், பக்​தர்​கள் உணர்​வு​களுக்கு மதிப்பு அளிக்​காமல் இந்து விரோத செயலில் இந்த அரசு ஈடு​பட்​டுள்​ளது.

பத​விப் பிர​மாணம் செய்​யும்​போது அனைத்​துத் தரப்​பினருக்​குமான அரசாகத்​தான் செயல்​படுவோம் என உறுதி​மொழி எடுத்​தனர். ஆனால், கொடுத்த உறுதி​மொழியையும், நீதி​மன்ற உத்​தரவையும் ஆளும் அரசே நிராகரித்​துள்​ளது.

நித்யா (மதுரை ஹார்​விபட்டி): திருப்​பரங்​குன்​றத்​தில் இவ்​வளவு பெரிய பிரச்​சினை நடந்து கொண்​டிருக்​கும் நிலை​யில் எங்​கள் ஊர் எம்​எல்​ஏவும், அமைச்​சரு​மான நிர்​மல்​குமாரை காணவில்லை. அவர் எங்கு இருக்​கிறார் என தெரிய​வில்லை.

மதநல்​லிணக்​கத்தை நிலைநாட்​டுவ​தாகக் கூறி மக்​களை ஏமாற்​றுகிறார்​கள். கடந்த முறை தீபத்​தூணில் தீபம் ஏற்​றாததாலேயே மதுரையிலுள்ள 9 தொகுதி​களி​லும் திமுக தோல்​வியடைந்​தது. இனிவரும் தேர்​தல்​களில் அனைத்​துத் தொகுதி​களி​லும் தவெக தோல்​வியடையும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *