நேபாளத்​தில் ஏற்​பட்ட பெரு​வெள்ள சேதத்​தில் சிக்கி 213 இந்தியர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் உயி​ரிழந்​த​தாக அறிவிக்க முடிவு!!

காத்​மாண்டு:
நேபாளத்​தில் ஏற்​பட்ட பெரு​வெள்ள சேதத்​தில் சிக்கி 213 இந்தியர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் உயி​ரிழந்​த​தாக அறிவிக்க அந்​நாடு முடிவு செய்துள்​ளது.

நேபாள நாட்​டிலுள்ள திபெத் – நேபாள எல்​லை​யில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி பெரும் பனிப்​பாறை சரிவு ஏற்​பட்​டது.

இதன் காரண​மாக அங்​குள்ள போடே கோஷி நதி​யில் பெரு​வெள்​ளம் ஏற்பட்​டு, ரசு​வா, நுவாகோட், சித்​வன் உள்​ளிட்ட மாவட்​டங்​களைப் புரட்​டிப் போட்​டது. நேபாள நாடு இது​வரை கண்​டி​ராத வகை​யில் மிகப்​பெரிய அளவில் அங்கு சேதம் ஏற்​பட்​டது. இந்த வெள்​ளத்​தில் சிக்கி ஆயிரக்​கணக்​கானோர் காணா​மல் போன நிலை​யில், 1,300-க்​கும் அதி​க​மானோரின் சடலங்​கள் மீட்​கப்​பட்​டன.

ஒரு மாதத்​துக்​கும் மேலாக அங்கு மீட்​புப் பணி​கள் நடை​பெற்று வந்​தன. இன்​னும், 5,000-க்​கும் அதி​க​மானோர் காணா​மல் போனவர்​களாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். இதில், இந்​தி​யா​விலிருந்து நேபாளத்​துக்​குச் சுற்​றுலா சென்ற 213 பேரின் நிலை இது​வரை தெரிய​வில்​லை.

இதனிடையே, பெரு​வெள்​ளம் ஏற்​பட்டு 3 மாதங்​கள் நிறைவடைந்​திருக்​கும் நிலை​யில், காணா​மல் போனவர்​களின் விவரங்​கள் அடங்​கிய பட்​டியலை வெளி​யிட்​டு, உயி​ரிழந்​தவர்​களாக அறி​விப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை அந்​நாட்​டின் தேசிய பேரிடர் குறைப்பு மற்​றும் மேலாண்மை ஆணையம் நேற்று தொடங்​கி​யுள்​ளது.

213 இந்​தி​யர்​கள் உட்பட 5 ஆயிரம் பேர் பெரு​வெள்​ளத்​தில் சிக்கி உயி​ரிழந்​த​தாக அறிவிக்க அந்​நாடு முடிவு செய்துள்​ளது. நேபாள அரசு சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்ள பட்​டியலில் 213 இந்தியர்களின் பெயர்​களும் இடம்​பெற்​றுள்​ளன.

மேலும், இந்த பட்டியலில் உள்ள விவரங்​களில் ஏதேனும் தகவல் சேர்த்​தல், நீக்கல் அல்​லது திருத்​தங்​கள் இருப்​பின், வரும் டிசம்​பர் 2-ம் தேதிக்கு முன்ன​தாக உறவினர்​கள் தங்​களது ஆட்​சேபங்​களைத் தெரிவிக்​கு​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​பட்​டிருப்​ப​தாக நேபாளத்திலுள்ள இந்​திய தூதரகம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக eoikathmandufloodsupport@gmail.com என்ற இ-மெயில் முகவரியையோ அல்​லது +9779851316807 என்ற செல்போன் எண்​ணிலோ தொடர்​பு​கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயி​ரிழந்​த​தாக அறிவிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்​தவுடன் இறப்​புச் சான்​றிதழ்​களை சம்​பந்​தப்​பட்​ட​வர்களின் உறவினர்​களிடம் நேபாள அரசு வழங்கும்​ என்​றும்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *