கள்ளக்குறிச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மீறி பேசவில்லை; உயர் நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பில் முறையீடு!!

சென்னை:
கள்ளக்குறிச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மீறி பேசவில்லை என அவரது தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தது குறித்து மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயணனிடம் முறையிட்டு இருந்தார்.

அப்போது நீதிபதி, “இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளேன். அந்த உத்தரவை மீறியிருந்தால் உங்களது அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணனிடம் முறையீடு செய்தார். அப்போது கள்ளக்குறிச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எந்த உத்தரவையும் மீறவில்லை எனக் கூறினார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி லட்சுமிநாராயணன், “பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு (POSH) சட்டத்தின் படி, புகார்தாரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் ஆகிய இருவரின் அடையாளங்களையும் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தக்கூடாது.

ஆனால், நீங்கள் அனைவரும் அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். மேலும், “எனது முந்தைய உத்தரவிலேயே இதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்” என்று நீதிபதி கூறினார்.

பின்னர் இந்த வழக்கில் தொடர்பில்லாத பிற வழக்கறிஞர்களை நீதிமன்றத்தை விட்டு வெளியேற்றிய நீதிபதி, இந்த வழக்கை மாலை சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை மட்டும் தனியாக விசாரிப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *