இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘பாக்கெட் நாவல்’ படம் பொங்கல் பண்டிகைக்குத் திரையரங்குகளில்!!

சென்னை:
சில கூட்டணிகள் மீண்டும் இணையும்போது ரசிகர்களிடம் இயல்பாகவே எதிர்பார்ப்பு உருவாகும்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘பாக்கெட் நாவல்’ படம், வரும் பொங்கல் பண்டிகைக்குத் திரையரங்குகளில் வெளியாகிறது.

டைலர் டர்டன், கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. படம் குறித்து தியாகராஜன் குமாரராஜா கூறும்போது, “சுவாரசியமான கதைக்களம், நமக்கு மத்தியில் வசிக்கும் நிஜக் கதாபாத்திரங்கள், அவற்றின் உணர்வுபூர்வமான தருணங்களோடு உருவாகியிருக்கிறது.

ரசிகர்கள் தங்களைப் படத்தின் கதையோடு எளிதாகப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். கடந்த பிப்ரவரியில் படப்பிடிப்பைத் தொடங்கி விரைவாக நிறைவுசெய்தேன்” என்றார்.

விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *