‘கிங்’ படத்தின் 2-வது பாடல் வெளியீடு : தனது பழைய ஸ்டைலில் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்த ஷாருக்கான்!!

சென்னை,
இந்தப் பாடலில் ஷாருக்கான் தனது பழைய ஸ்டைலில் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். சச்சின் – ஜிகர் இசையமைத்துள்ள இப்பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘கிங்’. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது.

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீண்டும் இணைந்துள்ள இப்படம், வரும் டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றமில்லை என ஷாருக்கான் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தார்.

சமீபத்தில் ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான ‘து மில் ஜாயே தோ’ (Tu Mil Jaye Toh) வெளியிடப்பட்டது. சச்சின் – ஜிகர் இசையமைப்பில் அரிஜித் சிங் மற்றும் எட் ஷீரன் இணைந்து பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் ஷாருக்கான் – தீபிகா படுகோனே இடையிலான காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தன.

இந்த நிலையில், ‘கிங்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘டாடி கூல்’ (Daddy Cool) வெளியாகியுள்ளது. உற்சாகமான நடனப் பாடலாக உருவாகியுள்ள இதில் ஷாருக்கானுடன் நடிகை கரீனா கபூர் கானும் இணைந்து தோன்றியுள்ளனர்.

இந்தப் பாடலில் ஷாருக்கான் தனது பழைய ஸ்டைலில் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். சச்சின் – ஜிகர் இசையமைத்துள்ள இப்பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கிங்’ திரைப்படம் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *