எங்களுடைய முடிவை மற்றவர்கள் எப்படி எடுக்க முடியும் என்று கேட்கத் தோன்றுகிறது ; ஆதங்கத்துடன் தெரிவித்த நடிகை மியா ஜார்ஜ்!!

சென்னை,
நடிகைகளுக்குத் திருமணமாகிவிட்டால் அவர்கள் மீண்டும் படங்களில் நடிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் திரையுலகில் நிலவுவதாக மியா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, குழந்தை பிறந்துவிட்டால் நடிகைகள் நடிப்பைத் தொடர மாட்டார்கள் என்று பலரும் தாங்களாகவே முடிவு செய்துவிடுவதாகக் கூறியுள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மியா ஜார்ஜ். தமிழில் ‘அமர காவியம்’, ‘இன்று நேற்று நாளை’, ‘வெற்றிவேல்’, ‘ஒரு நாள் கூத்து’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்ந்து வரும் இவர், தற்போது திரையுலகில் நடிகைகளுக்கு இருக்கும் பொதுவான அணுகுமுறை குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகைகளுக்குத் திருமணமாகிவிட்டால் அவர்கள் மீண்டும் படங்களில் நடிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் திரையுலகில் நிலவுவதாக மியா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குழந்தை பிறந்துவிட்டால் நடிகைகள் நடிப்பைத் தொடர மாட்டார்கள் என்று பலரும் தாங்களாகவே முடிவு செய்துவிடுவதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க விரும்புகிறீர்களா என்று கூட பலரும் கேட்பதில்லை. குழந்தை பிறந்துவிட்டால் நடிப்புக்கு திரும்ப மாட்டார்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். எங்களுடைய முடிவை மற்றவர்கள் எப்படி எடுக்க முடியும் என்று கேட்கத் தோன்றுகிறது என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு நடிகை மீண்டும் நடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது அவர்தான் என்றும், அதில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை.

மகப்பேறு விடுப்புக்குப் பிறகு ஓர் ஆசிரியை மீண்டும் பணிக்குத் திரும்பும்போது யாரும் அதுகுறித்து கேள்வி எழுப்புவதில்லை.

அதேபோல் மற்ற துறைகளிலும் பெண்கள் தங்களது பணியைத் தொடர்கின்றனர். ஆனால், சினிமா துறையில் மட்டும் திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்புக்குப் பிறகு நடிகைகள் நடிக்க வரமாட்டார்கள் என்ற பொதுவான எண்ணம் நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார்.

தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடர்வது குறித்த முடிவைத் தானே எடுக்க வேண்டும் என்றும், நடிகைகளின் தனிப்பட்ட முடிவுகளை மற்றவர்கள் தீர்மானிக்கக் கூடாது என்றும் மியா ஜார்ஜ் கூறியுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *