அர்ஜுனின் 175-வது படம்…… அயோத்தி ராமர் கோவிலில் தொடங்கியது!!

சென்னை,

‘ஆக்ஷன் கிங் 175’ (Action King 175) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூமி பூஜை கடந்த நவம்பர் 27-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போது தனது 175-வது திரைப்படத்தில் நடிக்கவும், அதனை இயக்கவும் அர்ஜுன் தயாராகியுள்ளார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஆக்ஷன் கிங் 175’ (Action King 175) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூமி பூஜை கடந்த நவம்பர் 27-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் நடைபெற்றது.

நாட்டுப்பற்றை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான போர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது. இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியான மேஜர் விஜய் பர்கவன் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். அர்ஜுன் கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தை இயக்கவும் செய்கிறார்.

பிரசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அனூப் மோகன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. அர்ஜுனின் 175-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *