க்ரைம் த்​ரில்​லர் படத்தில் முதன்மை வேடத்​தில் நடிக்​கும் பிரேம்ஜி அமரன்!!

சென்னை:
பிரேம்ஜி அமரன் முதன்மை வேடத்​தில் நடிக்​கும் க்ரைம் த்​ரில்​லர் படத்தை சி. கணேஷ்குமார் இயக்​கு​கிறார்.

இவர், ‘வல்​லமை’, ‘நரி வேட்டை’ உள்​ளிட்ட பல படங்​களுக்கு படத்​தொகுப்​பாளராகப் பணி​யாற்​றிய​வர்.

அபிராமி புரொடக் ஷன்ஸ் சார்​பில் லாவண்யா அபிராமி தயாரிக்​கும் இப்​படத்​தில் போஸ் வெங்​கட், சஸ்​திக், நயனா சாய் உள்​ளிட்​டோர் முக்​கிய வேடங்​களில் நடிக்​கின்​றனர்.

சிற்பி குமார் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படம் பற்றி இயக்​குநர் கூறும்​போது, “இளம்​பெண் ஒரு​வரை யார் கொலை செய்​தார்​கள் என்​பதை விவரிக்​கும் க்​ரைம் த்​ரில்​லர் படம் இது. முதன்மை வேடத்​தில் நடிக்​கும் பிரேம்ஜி அமரன், இசையும் அமைக்​கிறார்.

தொடக்​கம் முதல் இறுதி வரை பார்​வை​யாளர்​களை இருக்​கை​யின் நுனி​யில் அமர வைக்​கும் வகை​யில் இப்​படம் உரு​வாகி​யுள்​ளது. போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்​கின்​றன” என்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *