திருப்பரங்குன்ற தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க அரசு தயார் – திருமாவளவன்!!

மதுரை:
திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​றக் கூடாது என வலியுறுத்தி மதுரையில் மதநல்​லிணக்க கூட்​டமைப்பு சார்​பில் நேற்று பேரணி நடத்த ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. இதற்கு போலீ​ஸார் அனுமதி மறுத்​தனர்.

இதையடுத்து, பேரணிக்கு பதிலாக ஆர்ப்​பாட்​டத்தை நடத்​தினர். இதில் விடுதலைச் சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் பங்​கேற்​றார்.

முன்​னதாக, மதுரை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சீராய்வு மனு தாக்​கல் செய்​துள்​ளதன் மூலம் தமிழக அரசு தனது நிலைப்​பாட்டை வெளிப்​படுத்தி உள்​ளது. அதில் அரசு உறுதி​யாக இருக்​கும்.

நீதி​மன்ற உத்​தரவை மதிப்​ப​தால்​தான் சீராய்​வுக்கு சென்​றுள்​ளோம். இவ்​விவகாரத்​தில் உச்ச நீதி​மன்ற உத்​தரவை அவ​மதிப்​ப​தாக வழக்கு தொடர்ந்​தால் அதை சந்​திக்​கவும் தமிழக அரசு தயாராக உள்​ளது.

உச்ச நீதி​மன்​றத்​தைவிட​வும் தமிழக வரலாற்று பின்​னணியை தமிழக அரசு அறிந்து வைத்​துள்​ளது. கள்​ளக்​குறிச்சி ஆட்​சி​யருக்கு குறுஞ்​செய்தி அனுப்​பப்​பட்​டது தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் வெளிவந்த தகவல்​களின் அடிப்​படை​யில் விவாதம் நடக்​கிறது.

குறுஞ்​செய்தி உண்​மைதான் என ஆட்சி​யர் துணிந்து சொல்ல வேண்​டும். உண்மை இது​தான், சம்​பந்​தப்​பட்​ட​வர் மீது நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என அவர் சொல்ல வேண்​டும். அப்​போது​தான் இப்​பிரச்​சினைக்கு தீர்வு கிடைக்​கும். இவ்​வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *