மேஷம்
துணிந்து முடிவெடுக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
ரிஷபம்
தடைகள் தானாக விலகும் நாள். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
மிதுனம்
கனவுகள் நனவாகும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
கடகம்
புகழ் கூடும் நாள். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும்.
சிம்மம்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
கன்னி
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உடல்நலம் பற்றிய கவலை உருவாகும்.
துலாம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
விருச்சிகம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
தனுசு
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சச்சரவுகள் அகலும். சவால்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
மகரம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். பெரியவர்களின் ஆலோசனை பிரச்சனை தீர வழிகாட்டும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.
கும்பம்
செவிகுளிரும் செய்தி காலை நேரத்தில் வந்துசேரும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்க முன்வருவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.
மீனம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.