பிடே போட்டியில் பங்கேற்கும் கிராண்ட் மாஸ்டர் குகேஷிற்கு வாழ்த்துகளை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!!

குகேஷ்- சிந்தாரோவ் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்குகிறது.

‘பிடே’ உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந்தேதி வரை நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் குகேசும், கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஜவோகிர் சிந்தாரோவும் (உஸ் பெகிஸ்தான்) கோதாவில் குதிக்கிறார்கள். இருவருக்கும் தற்போது வயது 20. இரு குறைந்த வயது வீரர்கள் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பாக இது பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், பிடே போட்டியில் பங்கேற்கும் கிராண்ட் மாஸ்டர் குகேஷிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறும் FIDE உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் சவாலை எதிர்கொள்ளும் நமது கிராண்ட்மாஸ்டர் குகேஷ் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
குகேஷின் அபாரமான திறமை, உறுதி மற்றும் சாதனைகள் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளன.

சதுரங்கப் பலகையில் உங்கள் அபாரத் திறமையால் தொடர்ந்து சரித்திரம் படைக்க வாழ்த்துகிறேன்!


அனைத்து நல்வாழ்த்துக்களும் குகேஷ்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *