பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்து வருவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் – அமெரிக்க செனட் அப்துல் அல் சயீத்… !!

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் அப்துல் அல் சயீத் மிச்சிகன் மாகாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


இதன்மூலம் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற பெருமையை சயீத் பெற்றார்.

இவரின் மனைவி டாக்டர் சாரா ஜூகாவின் குடும்பம், கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட குடும்பமாக அறியப்படுகிறது.

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, சயீத் ஒரு ஜிஹாதி என்றும், அவர் பயங்கரவாதிகளின் பக்கம் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் சயீதை வேண்டுமென்றே ‘முகமது’ என அடிக்கடி அழைத்த டிரம்ப், தான் அதிபராக இருப்பதால், அவரை நான் விரும்பியபடி அழைக்க தனக்கு உரிமை உண்டு எனவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து மிச்சிகன் மாகாண தேர்தல் வெற்றிக்கு பிறகு, தன்னை ‘செனட்டர்’ என்று அழைத்தால் மட்டும் போதும் என சயீத் பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் ஆண்டுக்கு சுமார் 1,800 கோடி வரை பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்து வருவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சயீத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இஸ்ரேல், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிபந்தனையற்ற ராணுவ உதவியை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.

அமெரிக்கா கடந்த 2025 நிதியாண்டில் பாகிஸ்தானுக்கு சுமார் 1,800 கோடி வரையில் நிதி உதவி அளித்திருந்தது.
இதில் 98 சதவீதம் பொருளாதாரத்திற்காகவும் மற்றும் 2 சதவீதம் ராணுவ உதவியாகவும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியிருந்தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *