இந்​தியா – நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான 4-வது டி20 கிரிக்​கெட் போட்டி; நியூஸிலாந்து அணி அபார வெற்றி!!

ஆக்லாந்து:
இந்​தியா – நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான 4-வது டி20 கிரிக்​கெட் போட்டி ஆக்​லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 259 ரன்​கள் குவித்​தது.

இது அந்த அணி​யின் அதி​கபட்ச ஸ்கோராக அமைந்​தது. மேலும், டி20 சர்​வ​தேச போட்​டிகளில் இந்​திய அணிக்கு எதிராக ஓர் அணி குவித்த அதி​கபட்ச ஸ்கோராகவும் இது அமைந்​தது. தனது 3-வது சதத்தை விளாசிய கிளென் பிலிப்ஸ் 49 பந்​துகளில், 10 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 107 ரன்​கள் விளாசினார்.

அவருக்கு உறுதுணை​யாக விளை​யாடிய மைக்​கேல் பிரேஸ்​வெல் 25 பந்துகளில், 6 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் குவித்தார்.

இந்த ஜோடி 5-வது விக்​கெட்​டுக்கு 41 பந்​துகளில் 115 ரன்​கள் வேட்​டை​யாடியது. இந்​திய அணி தரப்​பில் மயங்க் யாதவ் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினார்.

260 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணி​யால் 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 172 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது. ஜேக்​கப் டஃபி வீசிய முதல் ஓவரிலேயே சஞ்சு சாம்​சன் (4), இஷான் கிஷன் (0) ஆட்​ட​மிழந்​தனர்.

இதன் பின்​னர் இந்​திய அணி மீண்​டுவர முடி​யாமல் சீரான இடைவேளை​யில் விக்​கெட்​களை பறிகொடுத்​தது.

சஞ்சு சாம்​சன் 4, இஷான் கிஷன் 0, அபிஷேக் சர்மா 27, கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 22, அக்​சர் படேல் 7, நிதிஷ் குமார் ரெட்டி 21, திலக் வர்மா 35, நமன் திர் 28, அர்​ஷ்​தீப் சிங் 0 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். பிரின்ஸ் யாதவ் 18, மயங்க் யாதவ் 3 ரன்​கள் சேர்த்​தனர்.

நியூஸிலாந்து அணி தரப்​பில் ஜேக்​கப் டஃபி 4 ஓவர்​களை வீசி 23 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தினார்.

மேத்யூ பிஷர், மிட்​செல் சாண்ட்​னர் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 87 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்​றி​யாக அமைந்​தது.

5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் முதல் 3 ஆட்​டங்​களி​லும் இந்​திய அணி ஏற்​கெனவே வெற்றி பெற்று தொடரை கைப்​பற்​றி​யிருந்​தது. 5-வது மற்​றும் கடைசி போட்டி நாளை (நவம்​பர் 1-ம் தேதி) ஹாமில்​டனில் நடை​பெறுகிறது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி 20 போட்​டி​யில் இந்​திய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளரான அர்​ஷ்​தீப் சிங், 107 ரன்​கள் விளாசிய கிளென் பிலிப்ஸ் விக்​கெட்டை கைப்​பற்​றினார்.

சர்வதேச டி 20 அரங்​கில் அர்​ஷ்​தீப் கைப்​பற்​றிய 150-வது விக்கெட்டாக இது அமைந்​தது. இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்​திய முதல் இந்​திய வீரர் என்ற பெரு​மையை பெற்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *