திரு​வல்​லிக்​கேணி பார்த்​தசா​ரதி சுவாமி கோயி​லில், நிர்​வாகம் சார்​பில் தயாரிக்​கப்​படும் பிரசாதங்​களை பக்​தர்​களுக்கு வழங்​கும் திட்​டத்தை தொடங்கி வைத்​த அமைச்சர் ரமேஷ் !!

சென்னை:
திரு​வல்​லிக்​கேணி பார்த்​தசா​ரதி சுவாமி கோயி​லில், நிர்​வாகம் சார்​பில் தயாரிக்​கப்​படும் பிரசாதங்​களை பக்​தர்​களுக்கு வழங்​கும் திட்​டத்தை இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ் நேற்று தொடங்கி வைத்​தார்.

இந்து சமய அறநிலை​யத்​துறை மானியக் கோரிக்​கை​யின்​போது, கோயில்​களில் திருப்​பணிகள், பக்​தர்​களுக்​கான அடிப்​படை வசதி​கள், அன்​னதானத் திட்ட விரிவாக்​கம், கல்வி நிறு​வன மேம்​பாடு உள்​ளிட்ட பல்​வேறு அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்​டன.

அப்​போது, தனியாரால் தயாரிக்​கப்​படும் பிரசாதங்​களைத் தவிர்த்து, முது​நிலைக் கோயில்​களின் வளாகத்​திலேயே கோயில் நிர்​வாகம் மூலம் பிரசாதம் தயாரித்து பக்​தர்​களுக்கு வழங்க நட​வடிக்கை எடுக்​கப்​படும் என அமைச்​சர் அறி​வித்​திருந்​தார்.

அதன்​படி, தஞ்​சாவூர் மாவட்​டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில், கோவை மாவட்​டம் தேக்​கம்​பட்டி வனபத்​ரகாளியம்​மன் கோயில் உள்​ளிட்ட 37 முது​நிலைக் கோயில்​களில், நிர்​வாகம் மூலம் தர​மான பிரசாதங்​கள் தயாரித்து பக்​தர்​களுக்கு வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

இதன் தொடர்ச்​சி​யாக, திரு​வல்​லிக்​கேணி பார்த்​தசா​ரதி சுவாமி கோயி​லில் இத்​திட்டத்தை இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ் நேற்று தொடங்கி வைத்​தார்.

அப்​போது, கோயிலுக்கு வந்த பக்​தர்​களுக்கு லட்டு, புளியோதரை, அதிரசம், மிளகு​வடை, தேன் குழல் உள்​ளிட்ட பிரசாதங்​களை வழங்​கினார்.

இதில் தேன் குழல் ரூ.25-க்​கும், மற்ற பிரசாதங்​கள் ரூ.20-க்​கும் விற்​பனை செய்​யப்​படுவது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​நிகழ்ச்​சி​யில், இந்து சமய அறநிலை​யத்​துறை ஆணை​யர் வினய், கோயில் துணை ஆணை​யர் சி.நித்யா மற்​றும் துறை அலு​வலர்​கள் கலந்து கொண்​டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *