சவப்பெட்டி தயாரிப்பில் ஈடுபடும் 7 வயது சிறுவன் – பெற்றோர்கள் அதிர்ச்சி!!

சீனா; இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் திரைப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திர தோற்றத்தில், ஏழு வயது சிறுவன் ஒருவன் சீனாவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் தந்தை ஒருவர் தனது 4 வயது மகனை இறுதிச்சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அழைத்து சென்றுள்ளார்.


இதையடுத்து அந்த சிறுவன் வளர ஆரம்பித்தவுடன், அவனுக்கு இறுதிச்சடங்கு நிகழ்வு மீது அதீத ஈடுபாடு ஏற்பட தொடங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து சிறுவனுக்கு 7 வயது ஆனபோது, அவன் தனது தாயுடன் சேர்ந்து விளையாட்டு தனமாக இறந்த நிகழ்வில் மேற்கொள்ளப்படும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை உருவாக்க தொடங்கியுள்ளான்.


இதையடுத்து அந்த சிறுவனை, அவனது பெற்றோர்கள் பள்ளியில் சேர்த்துள்ளனர். அப்போது சிறுவன் படித்து வந்த பள்ளி ஆசிரியர், வீட்டுப்பாடங்களை (ப்ராஜெக்டுகளை) செய்து வரும்படி மாணவர்களிடம் கூறியுள்ளார்.

அப்போது இந்த சிறுவன், தனது வீட்டிற்கு வந்து ஓவியப் புத்தகங்கள் முழுவதும் ஈமச்சடங்கு தொடர்பான மலர்வளையங்களை வரைந்துள்ளான்.


இதைப்பார்த்த பள்ளியின் ஆசிரியர், சிறுவன் செய்த செயலை கண்டு அதிர்ச்சியடைந்து, அவனின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுவனின் செயலை கவனித்த பெற்றோர்கள், அவன் பெரும்பாலான நேரத்தில் செங்கற்களை பயன்படுத்தி இறுதிச்சடங்கு பெட்டிகளை உருவாக்குவதை பார்த்தனர்.


இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஒரு காலகட்டத்திற்கு பிறகு தங்களது மகனுக்கு ஆதரவளிக்க தொடங்கினர்.

இதுகுறித்து சிறுவனின் தாயார் கூறுகையில், ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கே உரிய பொழுதுபோக்குகள் உண்டு.


ஆனால் எனது குழந்தையின் பொழுதுபோக்கு சற்று வித்தியாசமாக இருக்கிறது என கூறினார்.

இந்த நிலையில் சிறுவன் செய்த இறுதிச்சடங்கு சவப்பெட்டிகள் இணையத்தில் பரவி பயனர்களின் கவனத்தை பெற்றது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட பயனர்கள், குழந்தைகளின் ஆர்வத்தை பெற்றோர்கள் மதிப்பது மிகவும் முக்கியம் என கூறினர்.

மேலும் இவ்வாறு இறுதிச்சடங்கு பெட்டிகளை தங்களது மகன் செய்யும்போது, அவனை அடிக்க வேண்டாம் எனவும், அவனை அடித்தால் அது அவனுக்கு மேலும் சவப்பெட்டிகளை செய்வதற்கான ஊக்கத்தை தரும் என்றும் பதிவிட்டனர்.

மற்றொரு பயனர், உண்மையாகவே வளர்ந்து வரும் இந்த துறையில் பணிபுரிந்தால், உங்கள் மகன் பணக்காரராகி விடுவார் என கிண்டல் செய்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *