மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்!!

சென்னை:
தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அண்மையில், விஜய்யின் தவெகவில் அதிமுகவில் முக்கிய முகமாக இருந்த செங்கோட்டையன் இணைந்தார்.

அவரைத் தொடர்ந்து திமுக, மதிமுக, அதிமுக என பல கட்சிகளில் வலம் வந்த நாஞ்சில் சம்பத் இணைந்தார். இதனால் தவெகவுக்கு பலம் கூடியதாக பேசப்பட்ட நிலையில் விஜய்யின் முன்னாள் மேலாளர் திமுகவில் இணைந்துள்ளார்.

யார் இந்த பி.டி.செல்வகுமார்? திமுகவில் இணைந்துள்ள பி.டி.செல்வகுமார், விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர் எனத் தெரிகிறது.

தவிர இவர், ’கோயமுத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் விஜய்யுடன் நடித்தும் உள்ளார். மேலும், விஜய்யின் ‘சுறா’, ‘வில்லு’ ‘போக்கிரி’ ஆகிய படங்களுக்கு பிஆர்ஓவாக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் திமுகவில் இணைந்தது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமையகத்தில், இன்று (11-12-2025) காலை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளிக் கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும் கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மக்கள் சேவகரும் – “தென் மாவட்டங்களில் சிறந்த கல்வி நன்கொடையாளர்” விருது பெற்றவருமான ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனத் தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

அதுபோது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ரெ.மகேஷ், ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *