சென்னை:
நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதை அடுத்து அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு, மும்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றார்.
அணிவகுப்பு தொடக்கத்தின் அடையாளமாக ஹெலிகாப்டர்கள் தேசியக்கொடியை பறக்கவிட்டபடி மலர்களைத் தூவிச் சென்றன.
குடியரசு தினத்தை ஒட்டி இந்திய ராணுவத்தின் பிரசாந்த் வகை இலகு ரக ஹெலிகாப்டர்கள் வானில் அணிவகுத்தன.
ஐரோப்பிய யூனியன் தலைவரகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதால் ஐரோப்பிய யூனியன் கொடிகள் கட்டப்பட்ட வாகனங்கள் அணிவகுத்தன.
குடியரசு தினவிழாவில் ஆளில்லா விமானங்கள், டிரோன்கள், ராணுவ டாங்கிகள், டி19 பீஷ்மா ரக பீரங்கிகள் உள்ளிட்டவை அணிவகுத்தன.
குடியரசு தினவிழாவில் சூர்யஸ்திர ராக்கெட் லாஞ்சர், ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு, அர்ஜூன் வகை பீரங்கிகள் அணிவகுத்தன.