சென்னை:
நடிகர் விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.
தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.