முதல்வரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் என்னென்ன கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமோ அந்த கோரிக்கை களை எல்லாம் நிறைவேற்ற போராடுவேன்!! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி…

சென்னை:
முதல்வரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் என்னென்ன கோரி க்கைகளை நிறைவேற்ற முடியுமோ அந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற போராடுவேன் என்று ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகி களிடம் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்தார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கலந்துரையாடினார்.

முன்னதாக அமைச்சர் பேசியதாவது: உலகில் பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் கிடையாது.

அந்த வகையில் நாமும் பிரச்சினைகளை பேசி அதற்கு தீர்வு காணப் போகிறோம். சில பிரச்சினைகளை எளிதில் சொல்லிவிட முடியாது.

அதே நேரத்தில் நடைமுறைக்கு எது சாத்தியமோ உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக பேச வேண்டும், வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு.

ஏனெனில் எங்களுக்கு இந்த வாய்ப்பை தந்துள்ள முதல்வர் விஜய், வெளிப்படையான அரசு நிர்வாகம் என்ற நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறார்.

எது மக்களுக்கு நல்லது? எது மாணவர்களுக்கு நல்லது? எது பெற்றோருக்கு நல்லது? எது ஆசிரியர்களுக்கு நல்லது? என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு பயணித்து வருகிறது நமது பள்ளிக்கல்வித்துறை.

அப்படிப்பட்ட இத்துறையின் ஆணிவேராக இருப்பவர்கள் ஆசிரியர்கள்.

ஒரு சங்கம் பேசுவது இன்னொரு சங்கத்துக்கு முரணாக இருக்கலாம். அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.

ஒவ்வொரு சங்கமும் தங்கள் நிலைப்பாடு, தங்கள் கோரிக்கைகளை சொல்லலாம். கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் அனைத்தும் ஆவணப் படுத்தப்படும்.

உதாரணத்துக்கு என்னிடம் வரக்கூடிய மனுக்களை எல்லாம் ஒரு செயலியில் பதிவுசெய்து ஒரு மென்பொருள் மூலமாக முன்னுரிமை அடிப்படையில் அவற்றை பிரிக்கிறேன்.

இவ்வாறு ஆவணப்படுத்துவது மூலமாக, மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும்.

தமிழக முதல்வரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் என்னென்ன கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமோ அவற்றை எல்லாம் நிறைவேற்ற முயற்சிப்பேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்திர மோகன், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *