சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட முதல்வர் விஜய் !!

சென்னை:
தமிழக முதல்வர் விஜய் இன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று மாலை காரில் புறப்பட்டு அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த முதல்வர் விஜய், மெட்ரோ ரயிலில் ஏறி நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணித்தார்.

பயணசீட்டு பெற்றுக்கொண்டு மெட்ரோ ரயிலில் மக்களுடன் அமர்ந்து பயணித்த அவருடன், பயணிகள் உற்சாகமாகக் கலந்துரையாடினர்.

நந்தனத்தில் இறங்கிய முதல்வர் விஜய், அங்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகத்துக்கு சென்று அதிகாரிகளுடன் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர், அங்கிருந்து காரில் கிண்டி கத்திப்பாரா சென்ற முதல்வர், கிண்டியில் 101 அடி உயரத்தில் கட்டப்பட்ட மெட்ரோ பாலத்தை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கிண்டியிலிருந்து சாலை மார்க்கமாக போரூர் சென்ற அவர், மெட்ரோ 2-ம் கட்ட வழித்தடத்தில், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலில் ஏறி பூந்தமல்லி வரை பயணம் செய்து ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் அதே ஆளில்லா ரயிலில் போரூர் வரை பயணித்து, போரூரில் இறங்கி ஆய்வை நிறைவு செய்தார்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் முதல்வர் ஆய்வு செய்த நிலையில், சாலைகள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் ஏராளமான பொதுமக்கள் கூடி அவரை நோக்கி கையசைத்தனர். மேலும், பொதுமக்கள் முதல்வர் புகைப்படம், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *