ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக கொழும்பு சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!!

கொழும்பு:
ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக நேற்று இலங்கை சென்​றடைந்​தது.

இந்த அணி​யுடன் இடது கை பேட்​ஸ்​மே​னான சாய் சுதர்​சன் பயணிக்​க​வில்​லை.

சுதர்​சன் கால் விரல் காயத்​தில் இருந்து குணமடைந்து வரும் நிலை​யில், அவர் தற்​போது பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ திறன்​மிகு மையத்​தில் பயிற்சி மேற்​கொண்டு வரு​கிறார்.

முதற்​கட்​ட​மாக அவர், ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக வலைப் பயிற்​சி​யில் பேட்​டிங்​கில் ஈடு​பட்​டுள்​ளார். அடுத்த 3 முதல் 4 நாட்​கள் அவர், தொடர் பயிற்​சி​யில் ஈடு​படுத்​தப்​படு​வார்.

இதன் பின்​னரே அவரது உடற்​தகுதி குறித்து பிசிசிஐ மருத்​து​வக்​குழு முடிவு செய்​யும் என பிசிசிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இலங்கை சென்​றுள்ள இந்​திய அணி வரும் 7-ம் தேதி கொழும்பு நகரில் உள்ள நான்​டிஸ்​கிரிப்ட்ஸ் கிரிக்​கெட் கிளப்​பில் நடை​பெறும் பயற்சி ஆட்​டத்​தில் கலந்​து​கொள்​கிறது.

3 நாட்​கள் நடை​பெறும் இந்த போட்டி முடிவடைந்​தவுடன் முதல் டெஸ்ட் போட்டி நடை​பெறும் காலே நகருக்கு இந்​திய அணி புறப்​பட்​டுச் செல்​லும்.

காலே சர்​வ​தேச மைதானத்​தில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி நடை​பெறுகிறது. 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில்​ 23-ம்​ தேதி தொடங்​கு​கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *