அணை கட்ட கூடாது அவ்வ ளவுதான் – சௌமியா அன்புமணி பேச்சு !!

சென்னை:
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.

காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசுகையில்,


கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை. காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான்.


அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சட்ட முன்னெடுப்புகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர்.

ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்று தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர்.


இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அணை கட்ட வேண்டும், அல்லது கூடாது. அவ்வளவு தான்.

நடுவில் என்ன முயற்சி என்ன இருக்கு? நடுவில் முயற்சி செய்வது எல்லாம் தேவையில்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக முதல்வர் விஜய் பேசுகையில், இந்த விவகாரத்தில் பேசுகையில், “பக்கத்துக்கு நாட்டுகிட்டயே பிரச்னையை பேசி தீர்க்க முடியுது. பக்கத்துக்கு ஸ்டேட்டு கிட்ட பேசி பார்க்கலாம்னு நினைச்சேன்.


ஒரு முயற்சியா இதை பண்ணலாம்னு நினைச்சேன்” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *