டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரியை சந்​தித்த திமுக எம்​.பி. கனிமொழி!!

சென்னை:
டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரியை திமுக எம்​.பி. கனிமொழி சந்​தித்​தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதி​வில், “டெல்​லி​யில் மத்​திய நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் கட்​கரியை சந்​தித்​தேன்.

அப்​போது, ‘என்​எச்​-32 சாலை திட்​டத்தால் தூத்​துக்​குடி – மூலக்​கரை, அதைச் சுற்​றி​யுள்ள பகுதி விவ​சா​யிகளின் கவலைகளை எடுத்​துரைத்​தேன்.

குறிப்​பாக, என்​எச்​-32 சாலை​யின் புதிய வழித்​தட​மும், அதனால் விவ​சா​யம் மற்​றும் நீர்ப்​பாசனத்துக்கு ஏற்​படக்​கூடிய பாதிப்புகளும் குறித்து விவா​தித்​தேன்.

மேலும், அனுபவம் வாய்ந்த பொறி​யாளர்​களைப் பாதிக்​கும் வகையி​லான ‘5 ஆண்டு பணி ஒப்​பந்த வரம்​பு’ குறித்த தேசிய நெடுஞ் சாலை த்​துறை ஒப்​பந்​தப் பொறி​யாளர்​கள் சங்​கத்​தின் கவலைகளை​யும் அவரிடம் தெரி​வித்​து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று கேட்​டுக்​கொண்​டேன்” என்​று தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *