சென்னை:
உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மாநில சைபர் க்ரைம் பிரிவு டிஜிபி-யாக இருந்த பி.பால நாக தேவி சிபிசிஐடி டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த அபின் தினேஷ் மோடக் மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கூடுதல் டிஜிபி வித்யா ஜெயந்த் குல்கர்னி பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி-யாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இதேபோல், சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு (2) துணை ஆணையர் எம்.ராமமூர்த்தி க்யூ பிரிவு சிஐடி எஸ்பி-யாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த பி.கே.அரவிந்த் சென்னை எஸ்பிசிஐடி பிரிவு (1) எஸ்பி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்.பி அர்பிதா ராஜ்புட் சென்னை அண்ணா நகர் காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அங்கிருந்த துணை ஆணையர் ஈஸ்வரன் சென்னையில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த எஸ்.ஆர்.செந்தில் குமார் நாகப்பட்டினம், கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளர்.
சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பி வி.சரவண குமார் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பியாகவும், அங்கிருந்த எஸ்.பி டி.ரமேஷ் பாபு திருநெல்வேலி சிட்டி தலைமையிட துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உத்தரவில் உள்துறை செயலர் கே.மணிவாசன் தெரிவித்துள்ளார்.