நான் சினிமாவில் நடிக்கப்போவது என் பெற்றோருக்கு தெரிந்ததும் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது!! மமீதா பைஜூ….!!

சென்னை:
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மமீதா பைஜூ. முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த ஜனநாயகன், சூர்யாவுடன் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்கள் தொடர்ந்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் சினிமாவில் நடிக்கப்போவது என் பெற்றோருக்கு தெரிந்ததும் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் அதை யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.

நான் எங்கே போகிறேன் என்னுடைய எதிர்காலம் என்ன என்ற உரையாடல்கள் குடும்பத்துக்குள் நடந்தன.

அறிமுகம் இல்லாத துறைக்குள் நான் நுழைந்து கொண்டிருந்தேன் எனக்கு யாரையும் தெரியாது.

சினிமாவில் என் ஆரம்ப நாட்களை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது. நான் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம்.


என் வாழ்க்கையில் மிகவும் சுவாரசியமான காலகட்டமாகும். அது சற்று மனஅழுத்தமும் ஏராளமான சந்தேகங்களும் நிறைந்த ஒரு காலகட்டமாக இருந்தது.

அது என் வாழ்வில் தற்போதைய நிலையை விட அதிகமாக நினைவில் வைத்திருக்கும் ஒரு காலகட்டம். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *