பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதை​விட, முதலில் ஆண்​களுக்​கும், ஆண் குழந்​தைகளுக்​கும் சிறு வயதில் இருந்தே விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும்; நடிகை ரேவதி வலியுறுத்தல்!!

சென்னை:
பெண்​களின் முன்​னேற்​றம், விழிப்​புணர்வு குறித்து பேசுவதை​விட, முதலில் ஆண்​களுக்​கும், ஆண் குழந்​தைகளுக்​கும் சிறு வயதில் இருந்தே பெண்​கள் பாது​காப்பு குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும் என்று நடிகை ரேவதி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

‘பாரத் சோகா கக்​காய்’ அறக்​கட்​டளை சார்​பில், ‘பெண்​களின் நுாற்​றாண்டு என்​னிடம் இருந்து தொடங்​கு​கிறது:

விழிப்​புணர்​வில் இருந்து செயல்​பாட்​டுக்​கு’ எனும் தலைப்​பில், 6-வது மகளிர் கருத்​தரங்​கம் சென்னை மியூசிக் அகாடமி அரங்​கில் நேற்று நடந்​தது.

இதில் சிறப்பு விருந்​தினர்​களாக, நடிகை ரேவ​தி, ‘வரசக்தி ஹவுசிங் பைனான்​ஸ்’ நிறுவன இயக்​குநர் கல்​பனா சங்​கர், ‘யெய்ன் உடான்’ நிறு​வனர் வேதிகா அகர்​வால் ஆகியோர் பங்​கேற்​றனர்.

இந்த நிகழ்ச்​சி​யில் நடிகை ரேவதி பேசி​ய​தாவது: பெண்கள் பல்​வேறு துறை​களில் முன்​னேற்​றம் அடைந்து சாதனை​கள் படைத்​தா​லும், பெண்கள் பாது​காப்பு என்​பது இன்​றும் கேள்விக்​குறி​யாகவே உள்​ளது. சமூக வலை​தளங்​களில் தின​மும் பல்​வேறு நிகழ்​வு​களை பகிர்ந்து வரு​கிறோம்.

பெண்​களின் முன்​னேற்​றம், விழிப்​புணர்வு குறித்து பேசிக் கொண்​டிருப்​ப​தை​விட, முதலில் ஆண்​களுக்​கும், ஆண் குழந்​தைகளுக்​கும் சிறு வயதில் இருந்தே பெண்​கள் பாது​காப்பு குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும்.

கல்​வி, பொருளா​தா​ரம், விண்​வெளி ஆய்வு என பல்​வேறு துறை​களி​லும் பெண்​கள் சாதனை படைத்து வரு​கின்​றனர். ஆனாலும், படித்த குடும்​பங்​களில்​கூட குடும்ப வன்​முறை​கள் தொடர்​வது கவலை அளிக்​கிறது.

பெண்​ணி​யம் என்​பது ஆண்​களுக்கு எதி​ரானது அல்ல. பெண்​ணி​யம் என்​பது ஆண்​களை​விட பெண்​களை உயர்​வாகக் கருது​வதோ, ஆண்​களை வெறுப்​பதோ அல்ல. பாலின வேறு​பாடின்றி அனை​வருக்​கும் பாது​காப்பு அவசி​யம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​போது, “சினிமா உட்பட அனைத்து துறை​களி​லும் பெண்​களுக்​கான வாய்ப்​பு​கள் அதிக அளவில் உள்​ளன.

அதை பெண்​கள் நன்கு பயன்​படுத்​தி, தங்​கள் திறமை​யின் மூலம் முன்​னுக்கு வரு​கின்​றனர்.

சமு​தா​யத்​தில் பெண்​களின் நிலையை மாற்ற வீடு​கள், பள்​ளி​கள், கல்​லூரி​கள், அலு​வல​கங்​கள் என அனைத்து இடங்​களி​லும் மாற்​றங்​கள்​ தொடங்​க வேண்​டும்​” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *