ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் குறித்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு !!

மதுரை:
ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் குறித்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு. தேனி மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறையில் ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துவதற்காக தமிழக சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் தேனி விரைந்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தப்பிய கைதிகளில் நான்கு பேரை பிடித்த நிலையில் எஞ்சியோரை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார். அவரும் தேனியில் முகாமிட்டு தனிப்படை போலீசாருக்கு ஆலோசனைகளை அளித்து வருகிறார்.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கைதிகள் தப்பியது குறித்து விசாரணை நடத்துவதற்காகவும் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பிறகு அங்கிருந்து தேனி சிறைச்சாலைக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றுள்ளார்.

தப்பியோடிய கைதிகளை பிடிக்க, தமிழ்நாடு – கேரளா எல்லை மற்றும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கைதிகள் தப்பிய விவகாரத்தில் தமிழக சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோரின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *