அல்மாட்டி ஓபன் டென்னிசில் சாம்பியன்: டாப் 5 பட்டியலில் மெத்வதேவ் மீண்டும் இடம்!!

கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.

நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலி உடன் மோதினார்.


இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-7 (6-8), 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஏடிபி தரவரிசையில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஒரு இடம் முன்னேறி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதன்மூலம் டாப் 5 பட்டியலில் மெத்வதேவ் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *