தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் முக்கிய மாற்றம் செய்த ஆஸ்திரேலியா!!

ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றும் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், போர்ட் எலிசபெத்தில் (Gqeberha) நடைபெற்ற 2-வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் கேப்டவுனில் நாளை 3-வது மற்றும் கடைசி போட்டி தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்றால்தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இரு அணிகளும் களம் காண்கின்றன.

ஆஸ்திரேலியா அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி வரும் ரென்ஷா அபாரமாக விளையாடி வருகிறார். அதேவேளையில் தொடக்க வீரராக களம் இறங்கிய நிக் மேடின்சன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் நான்கு இன்னிங்சிலும் 0, 48, 0, 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனால் அவரை 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து ஆஸ்திரேலியா விடுவித்துள்ளது. அவரை உள்நாட்டு போட்டியில் விளையாட அனுமதித்துள்ளது.

அதேபோல் மாற்று விக்கெட் கீப்பராக சேர்க்கப்ப்ட சாம் ஹார்பரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் ஜோஷ் இங்கிலிஷ்க்குப் பதிலாக சேர்க்கப்பட்டார். இங்கிலிஷ் உடற்தகுதி பெற்றுள்ளதால் 3-வது டெஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்மித் கழுத்து வலியால் அவதிப்படுகிறார். நாளைய போட்டிக்கு அவர் உடற்தகுதி பெறுவாரா? என்று தெரியவில்லை.

இன்று சிறிது நேரம்தான் வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். ஒருவேளை ஸ்மித் உடற்தகுதி பெறவில்லை என்றால், அது அணிக்கு பெரும் பின்னடைவு ஆகும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *