பசும்​பொன்​னில் முத்​துராமலிங்​கத்​தேவர் குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்​கியது; நாளை குடியரசுத் துணைத் தலை​வர் உள்​ளிட்ட முக்​கியத் தலை​வர்​கள் வருகை!!

ராமநாதபுரம்:
பசும்​பொன்​னில் முத்​துராமலிங்​கத்​தேவர் குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்​கியது. நாளை குடியரசுத் துணைத் தலை​வர் உள்​ளிட்ட முக்​கியத் தலை​வர்​கள் பங்​கேற்று மரியாதை செலுத்து​கின்​றனர்.

ராம​நாத​புரம் மாவட்​டம் கமுதி அருகேயுள்ள பசும்​பொன்​னில் முத்​துராமலிங்​கத்​தேவரின் 119-வது ஜெயந்தி விழா, 64-வது குருபூஜை விழா அக்.28, 29, 30 ஆகிய தேதி​களில் நடை​பெறு​வது வழக்​கம். இந்த ஆண்டு நேற்று ஆன்​மிக விழா யாகசாலை பூஜைகளு​டன் தொடங்​கியது.

இன்று (அக்.29) அரசி​யல் விழாவாகவும், நாளை (அக்.30) குருபூஜை விழா அரசு விழாவாகவும் நடை​பெறுகிறது.

அக்.30-ல் நடை​பெறும் குருபூஜை விழா​வில் குடியரசுத் துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன், தமிழக அமைச்​சர்​கள், திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின், அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் மற்​றும் பாஜக, காங்​கிரஸ், மதிமுக, தேமுதிக, நாம் தமிழர், பாமக உள்​ளிட்ட அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள், சமுதாயத் தலை​வர்​கள், ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் பங்​கேற்று மரியாதை செலுத்த உள்​ளனர்.

தேவர் நினைவாலய நிர்​வாகத்​தின் சார்​பில் நேற்று காலை 7 மணிக்கு ஆன்​மிக விழா மங்​கள இசை, கணபதி ஹோமம், சிவாச்​சா​ரியார்​கள் வேத மந்​திரங்​கள் முழங்க, லட்​சார்ச்​சனையுடன் தேவர் குருபூஜை விழா தொடங்​கியது.

இதில் நினைவாலயப் பொறுப்​பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலை​மையில் நிர்​வாகி​கள் தங்​கவேல், பழனி மற்​றும் பொது​மக்​கள் கலந்​து​கொண்​டனர். காலை 11 மணிக்கு பிரசாதம் வழங்​குதல், மாலை 6 மணிக்கு திரு​விளக்கு பூஜை உள்​ளிட்ட நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன.

தென்​மண்​டல ஜஜி விஜயேந்​திர பிதாரி தலை​மையில் ராம​நாத​புரம் மாவட்​டம் முழு​வதும் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

நேற்று பசும்​பொன்​னில் சட்​டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு பாது​காப்பு ஏற்​பாடுகள் குறித்து ஆய்வு செய்​தார். அப்​போது ராம​நாத​புரம் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஜி.சந்​தீஷ் உள்​ளிட்ட அதி​காரி​கள் உடனிருந்​தனர்.

விழா​வில் அரசி​யல் கட்சி மற்​றும் சமுதாய அமைப்​பினர் சார்​பில் கூடங்​கள் அமைத்து அன்​னதானம் வழங்க ஏற்​பாடுகள் நடை​பெற்று வருகின்​றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *